வெறிநாய் கடித்து 3 வெள்ளாடுகள் செத்தன

வெறிநாய் கடித்து 3 வெள்ளாடுகள் செத்தன

Update: 2022-10-12 12:38 GMT

முத்தூர்

முத்தூர் அருகே உள்ள புதுப்பாளையம், காமராஜ் நகரைச்சேர்ந்தவர் பாப்பாத்தி(வயது 60). இவர் தனது வீட்டில் ஆடு மற்றும் நாட்டுக் கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இவர் ஆடு கட்டியிருந்த பகுதியில் ஒரு வெறிநாய் ஒன்று திடீரென்று புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 3 வெள்ளாடுகளை கடித்து குதறியது.

வெள்ளாடுகளின் அலறல் சத்தம் கேட்டு பாப்பாத்தியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது வெறிநாய் ஒன்று வெள்ளாடுகளை கடித்து குதறியதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அனைவரும் நாயை விரட்டினர். இதனால் அந்த வெறிநாய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. வெறி நாய் கடித்ததில் 3 வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. மேலும் வெறிநாய் கடித்து இறந்த 3 வெள்ளாடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்