ஆடு, கோழி விற்பனை அமோகம்

கோபால்பட்டி வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகமாக நடந்தது.

Update: 2022-10-22 14:41 GMT

சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. கோபால்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கோழி, ஆடுகளை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர். இதேபோல் இந்த சந்தையில் இருந்து கொள்முதல் செய்து திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு ஆடு, கோழிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் உள்ளூர், சுற்று வட்டாரத்தை சேர்ந்த இறைச்சி கடைக்காரர்களும் கொள்முதல் செய்கின்றனர்

இந்தநிலையில் நேற்று நடந்த சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி அமோகமாக விற்பனையானது. பொதுமக்கள், வியாபாரிகள் சந்தையில் குவிந்ததால் வியாபாரம் களை கட்டியது. இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு வெள்ளாடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும், 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

ஒரு கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.400-க்கும், ,1 கிலோ எடையுடைய சேவல் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்துக்குமாறாக ஆடு, கோழிகளின் வரத்து அதிகமாக இருந்ததால் பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை என்று விளக்குரோட்டை சேர்ந்த ஆட்டு வியாபாரி சரவணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்