மோகனூர்
மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புன்னைவன நாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. கோவிலை புதுப்பிக்க தொடங்கிய பக்தர்கள் கோவில் திருப்பணி தொடங்குவதற்கு இந்து அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறப்பட்டு, கோவில் முற்றிலும் இடித்து புதியதாக கட்டுவதற்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கோ பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர், மேனகா, நகை மதிப்பீட்டு வல்லுநர் ஜீவானந்தம், நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர், கோவில் செயல் அலுவலர் வினோதினி, மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.