பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்று விநாயகர் சிலை பீடத்தில் அமர்ந்த காகம் பக்தர்கள் பரவசம்

பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்று விநாயகர் சிலை பீடத்தில் அமர்ந்த காகத்தால் பக்தர்கள் பரவசம் அடைந்தனா்.;

Update: 2023-10-17 20:31 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் பெத்தாம்பாளையம் பிரிவில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் இந்த கோவிலுக்கு வந்து விநாயகரை தரிசனம் செய்து செல்வார்கள். இந்தநிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் ஒரு காகம் கோவில் வளாகத்துக்கு வந்தது. அப்போது சாமி தரிசனம் செய்ய நின்றிருந்த பக்தர்கள் ஏதோ காகம் கோவில் வளாகத்தில் இருக்கும் தீவனங்களை கொத்தி தின்பதற்காக வந்திருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் காகம் மெதுவாக கோவில் கருவறைக்கு சென்றது. பின்னர் வரசித்தி விநாயகரின் பீடத்தில் பொருத்தி இருக்கும் பித்தளை திருவாச்சியில் (அலங்கார வளைவு) ஏறி அமர்ந்து கொண்டது. இந்த காட்சியை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த தகவல் சிறிது நேரத்தில் அந்த பகுதியில் பரவியது. அதனால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பக்தர்கள் கோவிலில் திரண்டனர். இரவு 8 மணி ஆகியும் காகம் சாமி சிலையின் பீடத்தில் இருந்து வெளியே வரவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பக்தர்களை பெரும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்