ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-15 18:48 GMT

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த தேரை எந்த நேரமும் பக்தர்கள், பொதுமக்கள் பார்க்கும் வகையில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

ஆழித்தேரோட்டம்

இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஆழித்தேரோட்ட விழாவையொட்டி கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்டு தேரோட்ட விழா நடந்தது. இதனை தொடர்ந்து ஆடிப்பூர தேரோட்ட விழாவிற்காக ஆழித்தேருக்கு தற்காலிக கூரை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆடிப்பூர அம்மன் தேரோட்ட விழா கடந்த மாதம் 31-ந் தேதி நடந்தது.

கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி

இதனையடுத்து ஆழித்தேரின் தற்காலிக கூரைகள் பிரிக்கப்பட்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிரேன் மூலம் ராட்சத இரும்பு தூண்கள் ஆழித்தேரின் நான்கு புறமும் பொறுத்தப்பட்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்