ஆறுமுகநேரியில்ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா

ஆறுமுகநேரியில்ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-28 18:45 GMT

ஆறுமுகநேரி:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் 58-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தங்க மோதிரம் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர தலைவர் ரவிக்குமார், வெம்பூர் வட்டார தலைவர் திருப்பதி, திருச்செந்தூர் வட்டார துணைத் தலைவர் காமராஜ், திருச்செந்தூர் நகர தலைவர் ராமச்சந்திரன், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக மூலக்கரை ரோட்டில் உள்ள த.மா.கா. கொடி ஏற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்