இளம்பெண் கொலையான விவகாரம்: அரசு பஸ் கண்டக்டரை கொல்ல முயன்ற 9 பேர் கைது

மதுரையில் வீடு புகுந்து இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கண்டக்டரை கொல்ல முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-07 19:57 GMT

மதுரையில் வீடு புகுந்து இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கண்டக்டரை கொல்ல முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண் படுகொலை விவகாரம்

மதுரை சம்மட்டிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 42). அரசு பஸ் கண்டக்டர். பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரும் காளிராஜனும் 2½ ஆண்டுகளுக்கு முன்பு ஒரேபகுதியில் வசித்து வந்தனர். அப்போது காளிராஜனின் உறவினர் ஹரிஹரன் என்பவர் பாண்டியின் மகளை காதலித்துள்ளார்.

அதை அறிந்த பாண்டி அவர்களது காதலை கண்டித்துள்ளார். மேலும் மகளுக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் திருமண ஏற்பாடுகளை செய்தார். அதில் ஆத்திரம் அடைந்த ஹரிஹரன், பாண்டியின் மகளை வீடு புகுந்து கொலை செய்தார்.. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

9 பேர் கைது

இது தொடர்பாக காளிராஜனும், பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்மட்டிபுரம் 2-வது தெருவில் காளிராஜன் தனியாக நடந்து சென்றார். அப்போது அவரை பாண்டி உள்பட 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல் அவர் மீது கொலைவெறி தாக்குல் நடத்தியது. அவர்களிடம் இருந்து தப்பிய அவர் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் பாண்டி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் மறைந்திருந்த ரமேஷ் (21), கருப்பையா, அன்பு (19), காட்டு ராஜா (21), சூர்யா, விக்னேஷ் (24). லோகேஷ் (20), மலைச்சாமி (19), பால்ராஜ் (19) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாண்டியை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்