ஆடு மேய்க்க சென்ற 2 சிறுமிகள் மாயம்
ஆடு மேய்க்க சென்ற சிறுமிகள் மாயமாகினர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15, 16 வயது சிறுமிகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தனர். மேலும் அவர்கள் இருவரும் ஆடு மேய்த்துள்ளனர். சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இருவருடைய பெற்றோரும் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் புழுதிபட்டி போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் மாயமான சிறுமிகளை தேடி வருகின்றனர்.