சிறுமிக்கு பாலியல் தொந்தரவு;வாலிபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு;வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-26 18:46 GMT

ஆலங்குடி:

ஆலங்குடியை சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (வயது 35). விவசாயி. இவர், 14 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை தான் கூப்பிடும் இடத்திற்கு வர வேண்டும். இல்லை என்றால் உனது குடும்பத்தாரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் ரமேசை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்