திருப்பத்தூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
திருப்பத்தூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 34). இவர் சம்பவத்தன்று 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாத்தா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராமச்சந்திரனை கைது செய்தனர்.