சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் சித்தப்பா கைது
சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் சித்தப்பா கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமியை, அவளது சித்தப்பா உறவு முறை கொண்ட 31 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால், அவள் தனது பெற்றோரிடம் அதுபற்றி கூறினார். அவர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து துணிக்கடையில் வேலை பார்த்து வரும் அந்த நபரை கைது செய்தனர்.