சிறுமிைய கர்ப்பமாக்கிய பெயிண்டர் கைது

சிறுமியை கா்ப்பமாக்கிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-04 19:48 GMT

வல்லம்;

தஞ்சை அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரம்

தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் அறிவழகன் (வயது 31). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை அவருடைய உறவினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

கைது

இந்தநிலையில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு மூலம் சிறுமியின் தாய் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை தேடி வந்தனா். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தஞ்சயில் அறிவழகன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை போலீசாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்