சிறுமி கர்ப்பம்: என்ஜினீயர் போக்சோவில் கைது
சிறுமி கர்ப்பம்: என்ஜினீயர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், கொசூர் அருகே உள்ள பனைமரத்துகாடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 27). ஏரோநாட்டிக்கல் படித்துள்ளார். இந்தநிலையில், தினேஷ் குமார் கடந்த ஜுன் மாதம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி 5 மாத கர்ப்பிணியாகி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தினேஷ்குமார் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.