பெண் திடீர் சாவு

பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.;

Update: 2023-06-28 18:42 GMT

திருக்காடுதுறை அருகே உள்ள கரைப்பாளையம் பூலான் காலனியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பான்மதி (வயது 47). கூலி தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பான்மதி, லோகநாதனிடம் எனது அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதற்கிடையில் பான்மதி வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்து விட்டு, துணி மாற்றும் அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து பான்மதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பான்மதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்