கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு - போலீசார் விசாரணை...!

மேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-08 09:00 GMT


மதுரை மாவட்டம்  மேலூர் அருகே உள்ள பட்டுர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மருதுபாண்டி. இவரது மகள் யாஷிகா ஸ்ரீ (வயது 8) பட்டூர் அருகிலுள்ள ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தார்.

இவரது பெற்றோர்கள் பட்டுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோப்பில் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி யாஷிகா ஸ்ரீ எதிர்பாராத விதமாக தோப்பில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி வெகு நேரமாக காணாததால் பெற்றோர்கள் அருகில் தேடி உள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து மேலவளவு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறங்கி சிறுமியை தேடிபார்த்தனர். அப்போது சிறுமி யாஷிகாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பின்னர், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்