தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

ராமநாதபுரம் பகுதியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-06-23 18:45 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 59). இவரது மகள் திவ்யா (34). இவருக்கும் ராமநாதபுரம் குமரைய்யா கோவில் பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் அய்யப்பன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் ராமநாதபுரம் மகாசக்தி நகர் 9-வது தெருவில் வசித்து வந்தாராம். இவர்களுக்கு ரகுநாத் (11) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திவ்யா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முருகன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்