தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தேனி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-22 18:45 GMT

தேனி அருகே உள்ள தம்பி பிராதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி விவிதா (வயது 21). இவர், வயிற்று வலியால் அவதியடைந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெறுவதற்காக பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது தாயார் விஜயலட்சுமி வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் வலி அதிகமானதால் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விவிதா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதற்கிடையே அங்கு வந்த விஜயலட்சுமி அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்