இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-28 18:45 GMT

பொள்ளாச்சி, 

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறு

பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி லாவண்யா (21). இவர்களுக்கு ரோகித் (4) என்ற மகன் உள்ளான். லாவண்யா பிளாஸ்டிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனை, திருப்பூர் மாவட்டம வயலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று நிஷாந்த் வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். ஆனால், கதவை திறக்காததால் லாவண்யா கோபத்தில் இருப்பதாக நினைத்து, தனது நண்பர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதற்கிடையே வீட்டின் உரிமையாளர் நேற்று கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் நிஷாந்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர் வந்த உடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது லாவண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிஷாந்த் அடிக்கடி பெண் ஒருவருடன் செல்போனில் பேசுவதால் சந்தேகம் ஏற்பட்டு கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதற்கிடடையில் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்