தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
திருமருகல் அருகே தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூக்கில் பிணமாக தொங்கினார்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய மனைவி விவேதா (வயது 20).இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு நித்தீஸ்வரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.ராம்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
விவேதா மாமனார், மாமியாருடன் கங்களாஞ்சேரியில் வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.பாட்டி ராஜலட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்..காலை 11 மணி ஆகியும் விவேதா அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார். பின்னர்.அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விவேதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் விவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விவேதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்