இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தென்காசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-10-17 18:45 GMT

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை சேர்ந்த செல்லையா மகள் ரம்யா (வயது 17). இவருக்கும், வீரகேரளம்புதூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமார் என்பவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 45 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ரம்யா சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ரம்யாவுக்கு உரிய வயதுக்கு முன்பே அதாவது 16 வயதிலேயே திருமணம் நடைபெற்று இருப்பதால் அதுகுறித்தும் விசாரணை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்