தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள கள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகள் நித்யா (வயது 22). பி.ஏ. படித்து முடித்த இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர் உறவுக்கார வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நித்யாவை அவரது பெற்றோர் எம்.புதுப்பட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இளம்பெண் நித்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யா தற்கொலைக்கு என்ன காரணம்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.