இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-08-10 18:45 GMT

நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினோதா (28). இவர்களுக்கு ஸ்ரீவந்த் (5) என்ற மகனும், யாஷிகா (3) என்ற மகளும் உள்ளனர். நேற்றுமுன்தினம் வினோதா அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோதா உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வினோதாவின் தாய் செண்பகம் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். வினோதாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனாமணி விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்