இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி முருகன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொன் காமராஜ் மகள் திலகா (வயது 20). இவர் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூரியில் படிப்பை முடித்தார். இவரது கல்லூரி தோழியான பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து கொண்டார். அந்த துக்கத்தில் இருந்து திலகா மனம் உடைந்து காணப்பட்டதாகவும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திலகா தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழி இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.