பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-10-12 19:19 GMT

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விருதுநகரில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோர் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த் குமார் தொடங்கி வைத்தார். விருதுநகர் ஹவ்வாபீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் சார்பு நீதிபதி ராஜகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்