தர்மபுரி அருகே 3 மாத பெண் குழந்தை திடீர் சாவு

Update: 2022-12-19 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அந்த குழந்தையை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்