எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் சாதனை: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு பரிசு நகரமன்ற தலைவர் வழங்கினார்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் பரிசு வழங்கினார்.

Update: 2022-06-28 16:15 GMT


கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர் சாய்பிரசன்னா 600-க்கு 516 மதிப்பெண்களும், மாணவர் ஹரிஷ் ராகவேந்திரன் 515 மதிப்பெண்களும், மாணவர் பூவேந்திரன் 506 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவர் சமீர் 500-க்கு 466 மதிப்பெண்களும், மாணவர் பூவரசன் 433 மதிப்பெண்களும், மாணவர் அதியமான் 426 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு நகரமன்ற தலைவரும், பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவருமான சுப்புராயலு ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினார். அப்போது நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக், பெற்றோர்-ஆசிரியர் கழக செயலாளர் அபுபக்கர், துணைத் தலைவர் கலைச்செல்வன், இயக்குனர் அருண்கென்னடி, நகரமன்ற கவுன்சிலர்கள் தேவராஜ், விமலா செல்வம், ஆசிரியர் பழனிவேல் மற்றும் இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்