வேதாரண்யம், கத்தரிப்புலம் பனையடி குத்தகை அன்னை வடுவம்மாள் ராமசாமி அறக்கட்டளையின் 6-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் நினைவாக தேத்தாகுடி சாரதாம்பாள் பள்ளி மாணவர்கள், அண்டர்காடு விவேகானந்தா பள்ளி, கத்தரிப்புலம் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி-வினா, ஒப்புவித்தல் போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டு காலண்டர்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஈகா அறக்கட்டளை குழுமத்திற்கும் உதவி செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஆர். மகாதேவன், நண்பர்கள், அன்னை வடிவம்மாள் ராமசாமி அறக்கட்டளை குழுமத்தினர் செய்திருந்தனர்.