அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம்

அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம்

Update: 2023-01-27 21:44 GMT

நாகர்கோவில்:

பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 -ந் தேதியன்று அரசு மருத்துவமனைகளில் பிறந்த பெண்குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. மாவட்ட சமூகநல அதிகாரி சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷகிலா பானு ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பெட்டகம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து மருத்துவ மாணவ- மாணவிகளிடையே அதிகாரி சரோஜினி பேசும்போது கூறியதாவது:-

பெண்குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகரிக்கவும் ஆண்களுக்கு நிகரான கல்வியை பெண்குழந்தைகளுக்கு கொடுக்கவும், குழந்தை திருமணத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா.

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

என்ற பாரதியின் பாடலின்படி பெண்குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் நடைபெற்றால் அதனை எதிர்க்க வேண்டும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டமாகிய உயர்கல்வி உறுதித்திட்டம், முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் போன்ற திட்டங்கள் பற்றி விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். 181 மற்றும் 1098 இலவச உதவி எண்கள் மூலம் பெண்குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் நடைபெற்றால் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்