கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-07-10 15:59 GMT

தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தர்மபுரியில் நடைபெற்றது. 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் ஏராளமான அணிகள் பங்கேற்று விளையாடின. முதல் மண்டலத்தில் தர்மபுரி வின்னர் கிளப் அணி முதலிடத்தையும், பாலக்கோடு டைமண்ட் காட்டன் யூத் அணி 2-ம் இடத்தையும் பிடித்தது. இதேபோன்று 2-வது மண்டலத்தில் தர்மபுரி சபரி ஹரி கிளப் அணி முதலிடத்தையும், தர்மபுரி டைம் பாஸர்ஸ் கிளப் அணி 2-ம் இடத்தையும் பிடித்தது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு வழங்கும் விழா தர்மபுரி அபிராமி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் மார்ட்டின் ராஜ் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்