சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்து 2 பெண்கள் காயம்

ராட்சத மரம் விழுந்து 2 பெண்கள் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2022-07-12 16:37 GMT

ராட்சத மரம் விழுந்து 2 பெண்கள் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

பெண்கள் காயம்

பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மகாலிங்கபுரம் நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ள வளாகத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப் பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

மரம் விழுந்த போது அந்த வழியாக சென்ற நகராட்சி தற்காலிக பணியாளர் வனிதா (வயது 35), மரப்பேட்டை வீதியை சேர்ந்த நந்தினி (23) ஆகியோர் காயமடைந்தனர்.

இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சார உயர்அழுத்த மின் கம்பியில் மரம் விழுந்தது. இதனால் மின்கம்பிகள் திடீரென்று அறுந்தன. மின்கம்பம் சேதம் அடைந்தது. இது குறித்த தகவலின் பேரில் அந்த பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. உடனே போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் வந்து பார்வையிட்டார். அவர், அதிகாரிகளை வரவ ழைத்து உடனடியாக மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மரத்தை அகற் றும் பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு, மின் சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்