பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளங்கள்

ஆற்காடு அருகே பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-05-11 16:57 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தாசில்தார் வசந்தி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் தணிகாசலம், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் வருவாய்த் துறையினர் மணல் கடத்தலை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் புதுப்பாடி பாலாற்று பகுதியில் ராட்சத பள்ளங்கள் எடுத்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இதையும் மீறி யாராவது பாலாற்றில் மணல் கடத்துகிறார்களா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்