கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து

கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது

Update: 2023-10-22 20:51 GMT

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவர் நேற்று மாலை வீட்டுக்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே இதுகுறித்து செல்வராஜ் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த டி.வி., பீரோ, கட்டில், வங்கிகணக்கு புத்தகம், ஆதார் கார்டு உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்