கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.

Update: 2023-01-20 18:45 GMT

வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.

சாலை பாதுகாப்பு வார விழா

நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, வாகன ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் யாரும் வாகனங்களை ஓட்டக்கூடாது. வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே, குறிப்பாக மனநிலையை கூட பரிசோதித்து, 3 கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.

96 பேர் சாலை விபத்தில் பலி

இதன் காரணமாக தான் அங்கு விபத்துகள் வெகு குறைவாக உள்ளது. கடந்தாண்டு மட்டும் நாகை மாவட்டத்தில் 96 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் தான் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலை விபத்துகள் தடுக்கப்பட வேண்டும். மது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

கண் பரிசோதனை

வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கண் பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் பள்ளி வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய செயல்பாடு, கண் பரிசோதனை ஆகியவை குறித்து பரிசோதிக்கப்பட்டது. மோட்டர் வாகனச் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும். மது அருந்திவிட்டு செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது என டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விழிப்புணர்வு உறுதிமொழி

தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. முகாமில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்