பொது மருத்துவ முகாம்

கீரப்பாளையம் அருகே பொது மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-09-01 18:45 GMT

சிதம்பரம்:

கே.ஆடூர் ஊராட்சி மன்றம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிதம்பரம் திருநாளைப்போவார் சமூக நல இலக்கியப் பேரவை மற்றும் நெய்வேலி ரெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் கீரப்பாளையம் ஒன்றியம் கே.ஆடூர் ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தணிகைவேல் தலைமை தாங்கினார். இலக்கியப் பேரவை தலைவர் பெரு.சிவலிங்கம், துணை தலைவர் வைத்தியலிங்கம், செயலாளர் ராஜநாயகம், துணைச்செயலாளர் உலகநாதன், பொருளாளர் மோகன்குமார், கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராகிம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி ரெஸ்ட் தொண்டு நிறுவன பவுல்ராஜ், ஒருங்கிணைப்பாளர் மெட்டில்ராணி ஆகியோர் வரவேற்றனர். மருத்துவ குழு கண்காணிப்பாளர் ஜெயசிங் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது மருத்துவம், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவம், மகப்பேறு, எலும்பு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, தோல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மருந்து மாத்திரை வழங்கினர். இதில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் செயற்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, மணி, கணேசன், பன்னீர்செல்வம், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்