பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று காலை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை சரி செய்ய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்ற வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய திருத்தங்களை செய்து கொடுத்தார். அதன்படி 6 பேருக்கு நகல் ரேஷன் கார்டுகளும், 7 பேருக்கு முகவரி மாற்றமும், 5 பேருக்கு பெயர் சேர்ப்பும், 3 பேருக்கு பெயரை நீக்கியும், 19 பேரின் ரேஷன் கார்டுகளில் தொலைபேசி எண்களை இணைத்தும், 2 பேருக்கு பெயரில் உள்ள பிழைகளை சரி செய்தும் உரிய ஆணைகளை வழங்கினார். இந்த சிறப்பு முகாம் மூலம் 42 பேர் பயன்பெற்றதாக வட்டவழங்கல் அதிகாரி ஜெயபாண்டி தெரிவித்தார்.