பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது

Update: 2023-07-07 18:45 GMT

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல் கைப்பேசிஎண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம். எனவே பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்