அரசு மருத்துவமனையில் ஒட்டுமொத்த துப்புரவு பணி
நிம்மியம்பட்டு அரசு மருத்துவமனையில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் .டி.ஆர்.செந்தில் வழிகாட்டுதல்படி, ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு.சரவணகுமார், சுகாதார ஆய்வாளர்கள், டி.பி.சி. பணியாளர்கள் உடனிருந்து பணிகளை செய்தனர்.