இயற்கை அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் பொதுக்குழு கூட்டம்

இயற்கை அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-06-14 20:12 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் இயற்கை அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் மழைராஜ் தலைமை தாங்கினார். செயல் தலைவர் பாலசுப்பிரமணி, துணைத் தலைவர் ராம்குமார் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவது. தேசிய அளவில் அவர்களின் திறமைகளை வெளிக் கொணர செய்வது. மேகங்களை பார்த்து மழைப்பொழிவை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கும்படி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இயற்கை அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்