பொதுக்குழு கூட்டம்
சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் நலக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ரெயில்வே பீட ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக மக்கள் நலக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாஸ்டர் தனராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். அரசியல் நிலைப்பாட்டு குழு மாநில செயலாளர் டாக்டர் ராமநாத், வருங்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மே 9-ந் தேதி கட்சியின் 2-வது அரசியல் மாநாடு நாகர்கோவிலில் நடத்துவது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் நிலைப்பாடு குறித்து முடிவுகள் அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் முத்துக்கண்ணு நன்றி கூறினார்.