பொதுக்குழு கூட்டம்
திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், உரிய மருந்து விற்பனை உரிமங்கள் இன்றி ஆன்லைன் வணிக செயலிகள் மூலம் விளம்பரம் செய்வோரை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மார்க்கெட்டில் ஜனரிக் பெயரில் மருந்துகள் விற்பனைக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடு்க்க வேண்டும். சில்லரை மருந்து வணிகர்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கி தங்களது கொள்முதல் பண பரிவர்த்தனைகளை வங்கி மூலம் செய்ய வேண்டும். வங்கிகள் மருந்து வணிகர்களின் விற்பனை உரிமத்தை ஆதாரமாக கொண்டு வங்கிகளில் எளிமையாக கணக்குகள் தொடங்க ஒத்துழைக்க வேண்டும். காசி ராமேஸ்வரம் இடையே வாராந்திர ெரயில் இணைப்பு தொடங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.