தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தலைவாசலில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-09 20:05 GMT

தலைவாசல்

தலைவாசல் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் தலைவாசல் பஸ் நிலையத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தேவேந்திரன் வரவேற்று பேசினார். மத்திய ஒன்றிய செயலாளர் சாத்தப்பாடி மணி என்கிற பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. குலசேகரன், தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் அழகுவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் வரகூர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் சத்தியவதி கலந்து கொண்டு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினார்.

இதில் மாவட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், காசிலிங்கம், ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பழகன், விஜயகுமாரி நடேசன், விஜயா ஆனந்தகுமார், தமிழ்வாணன் ரஜினி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அபிராமி சேட்டு, மாயகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிவாஸ், தலைவாசல் வட்டார அட்மா குழு உறுப்பினர்கள் கண்ணுசாமி, தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பிச்சமுத்து நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்