தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இளையான்குடி
இளையான்குடியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது தலைமையில் இளையான்குடி சந்தைப்பேட்டை திடலில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான சுப.மதியரசன், பேரூர் செயலாளர் நஜூமுதீன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கணேசன், காளையார்கோவில் குணசேகரன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பேரூராட்சி துணை தலைவர் இப்ராகிம் நன்றி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், மாவட்ட, பிரதிநிதிகள் தெட்சிணாமூர்த்தி, சாரதி, தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன், அழகேசன், தொண்டரணி புலிக்குட்டி, மகளிர் தொண்டர் அணி பஞ்சவர்ணம், பேரூர் நிர்வாகிகள் ஆரிப், ஜைனுலாபுதீன், பைரோஸ் கான் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.