எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம்
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இளையான்குடி
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி இளையான்குடி அருகே கீழாய்குடி கண்ணதேவன்புலி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கிருஷ்ணபிரபு உதவியால் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இளையான்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணபிரபு தலைமை தாங்கினார். வக்கீல் ராம.லட்சுமணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகன், கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் ஆகியோர் பேசினர்.
இதில், மானாமதுரை தொகுதி செயலாளர் தெய்வேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜா, மாநில நிர்வாகிகள் திருஞானம், முத்துக்குமார், சிவனேஸ்வரன், சுகபதி, நகர் செயலாளர்கள் பாலா, கே.வி.சேகர், ரவிக்குமார், நமச்சிவாயம், தொகுதி செயலாளர்கள் நாகராஜன், பழனி, பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் நிவாஸ் சக்கரவர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் கயல்விழி பாண்டியன், மாணவரணி செயலாளர் மாரிமுத்து, விவசாய அணி செயலாளர் சித்திரைசாமி, அவைத்தலைவர் சூரவர்த்தி பழனியப்பன், பொருளாளர் பழனி, செயலாளர் கணேஷ் பாபு, ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அங்குராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், பாலா, குமரன், தவம், மணிகண்டன், மனோகரன், கண்ணதாசன், செல்லபாண்டியன், சண்முகசுந்தரம், முருகேசன், முத்துப்பாண்டி, கீழாய்குடி தினகரன், சரவணன், ஜெகநாதன், பாண்டி, மோகன், ராஜசேகர் ரங்கநாதன், சேகர், கண்ணன், கங்காதரன், செல்லப்பாண்டி, ராஜீ, ரவி, மோகன், ஜெகதீஷ், குமாரகுறிச்சி செல்லம், கருப்புசாமி, மோகனசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.