கீழப்பாவூர் யூனியன் கூட்டம்
கீழப்பாவூர் யூனியன் கூட்டம் அதன் தலைவி காவேரி சீனித்துரை தலைமையில் நடந்தது.;
கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவி காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கீழப்பாவூர் யூனியன் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்தல், தடுப்பு சுவர் அமைத்தல், அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைத்தல், பேவர் பிளாக் சாலை அமைத்தல், சமுதாய நலக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து மேற்கூரை அமைத்தல், சமுதாய நலக்கூடம் பராமரிப்பு, பள்ளி கட்டிடம் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்ள நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட மொத்தம் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.