கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் ேகாவிலில் கந்தசஷ்டி திருவிழா
கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் ேகாவிலில் கந்தசஷ்டி திருவிழா கொண்டாடப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறில் திருநீலகண்ட ஈஸ்வரர் ேகாவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று மாலை 4மணிக்கு மேல் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடந்தது. இதில் கயத்தாறு, அரசன்குளம், வடக்கு சுப்பிரமணியபுரம், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், புதுக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.