உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

விசேஷ நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் புதுக்கோட்டையில், உறவினர் வீ்ட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-17 18:36 GMT

பெட்ரோல் குண்டு வீச்சு

புதுக்கோட்டை காந்திநகர் 7-ம் வீதியை சேர்ந்தவர் குணா. இவரது வீட்டில் நேற்று விசேஷ நிகழ்ச்சி நடந்தது. அப்போது காந்தி நகர் 6-ம் வீதியை சேர்ந்த உறவினரான நவீன் குமார் என்பவருக்கும், குணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குணா, அவரது சகோதரர் பிரசாத் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் நவீன் குமாரின் சகோதரர் பாலச்சந்திரன் வீட்டிற்கு சென்று அவரது வீட்டு கதவில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்குள் நுழைந்த குணா மற்றும் பிரசாத் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி பாலச்சந்திரனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அண்ணன்-தம்பி கைது

இந்நிலையில் காயமடைந்த பாலச்சந்திரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் பாலச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் குணா மற்றும் பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்