கியாஸ் அடுப்பு, சிலிண்டர்கள் திருட்டு; 2 பேர் கைது

திண்டிவனம் அருகே ஓட்டல் முன்பு வைத்திருந்த கியாஸ் அடுப்பு, சிலிண்டர்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-13 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் ஜக்காம் பேட்டை கிராமத்தை சேர்ந்த அசோக்(வயது36) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது ஓட்டல் முன்பு வைத்திருந்த 2 சமையல் கியாஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது குறித்து அசோக் கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் திவிர விசாரணையில் சமையல் கியாஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை திருடியது சாரம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்(54), கலாநிதி(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்