எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

Update: 2022-06-13 16:39 GMT

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சிவகிரி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு 15-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் தலைமையில் நடைபெறும் மனுநீதி நாள் முகாமின்போது சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. சிவகிரி தாலுகாவில் வசிக்கும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்