நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை

நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது

Update: 2023-09-19 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலில் கடந்த 17-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து பெருமாளுக்கு கருட சேவை உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்கிட பக்தர்களால் நான்கு வீதிகளில் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், பொது நல சங்கத் தலைவர் அன்பு, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், தி.மு.க. பிரமுகர் பழனிவேல், அண்ணன் கோவில் தீபக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்