காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காமராஜர் நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
காமராஜர் நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நினைவு தினம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 47-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சி
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கொக்கிரகுளம் கட்சி அலுவலகம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட நிர்வாகிகள் வண்ணை சுப்பிரமணியன், வெள்ளபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் காவேரி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மாவட்ட வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் டி.பி.எஸ்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் தாயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா-அ.ம.மு.க.
பா.ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில், அமைப்பு செயலாளர் வி.பி.குமரேசன் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆவின் அண்ணாசாமி, வக்கீல் அணி துணை செயலாளர் ஞானசங்கர், பொருளாளர் பாளை. ரமேஷ், இளைஞரணி செயலாளர் மகேஷ் கண்ணன், தச்சநல்லூர் தெற்கு பகுதி செயலாளர் சப்பானி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க-தே.மு.தி.க
ம.தி.மு.க. சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் ஆகியோர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தே.மு.தி.க. சார்பில் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஞானசேகர் தலைமையில், நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா, மாவட்ட பிரதிநிதி சரத் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்தேச தன்னுரிமை கட்சி
நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழ்தேச தன்னுரிமை கட்சி நிறுவன தலைவர் வியனரசு தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் நெல்லை மாநகர செயலாளர் துரைப்பாண்டியன், மாநகர மாணவரணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டியன், நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் மகாராஜன் பாண்டியன், கிழக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முருகன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் முருகேஷ் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாடார் உறவின்முறை சங்கம்
நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தலைவர் அசோகர், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் துணைத்தலைவர்கள் அந்தோணி ஜெயபாண்டியன், மகாலிங்கம், துணை செயலாளர்கள் பாக்கியராஜ், கே.வி.எஸ்.மனோகர், செயற்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், தாள சேகர், கண்ணன், எட்வர்டு ராஜா, செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிலை பராமரிப்பு குழு
நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பில் தலைவர் வித்யா கண்ணன் தலைமையில் சட்ட ஆலோசகர் செந்தில்வேல் குமார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் செயலாளர் சரத் மணி, பொருளாளர் தங்கவேல், துணை தலைவர்கள் சிவா, காசி, இளங்கோ, பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
சர்வதேச உரிமை கழக மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதேபோல் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.